என் மலர்
செய்திகள்

செல்போன் பறிப்பு
அரக்கோணம் அருகே ரெயில்வே ஊழியரை வெட்டி செல்போன் பறிப்பு
அரக்கோணம் அருகே ரெயில்வே ஊழியரை வெட்டி செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் திருத்தணி இடையே உள்ள புதூர் ரெயில்வே கேட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த விஸ்வகுமார் யாதவ் (வயது 26). என்பவர் கேட் கீப்பராக வேலை செய்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் விஸ்வகுமார் யாதவிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஸ்வகுமார் யாதவை வெட்டினர். வலியால் துடித்தார். அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
வெட்டுகாயம் அடைந்த விஸ்வகுமார் யாதவ் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் கிசிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் கிரி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






