என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
வேலூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் திடீர் மாற்றம்
வேலூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் திடீரென மாற்றப்பட்டுள்ள சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோரை இன்று காத்திருப்பு பட்டியலுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதற்கான காரணம் என்ன என்பது வெளியிடப்படவில்லை. இவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் சில நடவடிக்கைகள் எடுத்ததாக கூறப்படுகிறது.
மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் நகரத்தின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ள வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஒரே நேரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story