search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டரின் காரை வழிமறித்த காட்டுயானை
    X
    கலெக்டரின் காரை வழிமறித்த காட்டுயானை

    மசினகுடி அருகே, கலெக்டரின் காரை வழிமறித்த காட்டுயானை

    மசினகுடி அருகே வாக்குச்சாவடியை ஆய்வு செய்ய சென்றபோது, கலெக்டரின் காரை காட்டுயானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சிறியூர் ஆதிவாசி கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அதனை ஆய்வு செய்ய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா காரில் சென்றார். அப்போது அவருடன் உதவியாளர் இருந்தார். மேலும் கலெக்டரின் காருக்கு முன்னாலும், பின்னாலும் அதிகாரிகளின் வாகனங்கள் சென்றன. ஆனைக்கட்டி பாலத்தை கடந்து சென்றபோது, வாகனங்களை திடீரென காட்டுயானை ஒன்று வழிமறித்தது.

    உடனே கலெக்டரின் கார் உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. சிறிது நேரம் கழித்து சாலையில் காட்டுயானை நடந்தது. காட்டுயானையை பின்தொடர்ந்து வாகனங்கள் சென்றன. அதன்பின்னர் மீண்டும் காட்டுயானை வழியை மறித்து திரும்பி நின்றது.

    இதைத்தொடர்ந்து சுமார் 30 நிமிடங்கள் சாலையிலேயே நடந்து சென்ற காட்டுயானை, அதன்பிறகு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து கலெக்டர் கார் உள்பட அனைத்து வாகனங்களும் வேகமாக அங்கிருந்து சென்றன.

    தொடர்ந்து சிறியூர் வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து பிற வாக்குச்சாவடிகளுக்கும் சென்று ஆய்வு செய்துவிட்டு, முடிவில் ஊட்டிக்கு திரும்பினார்.

    கலெக்டரின் காரை காட்டுயானை வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×