search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெப்பக்குளத்திற்கு வந்த தண்ணீரை அமைச்சர் மலர் தூவி வரவேற்ற காட்சி.
    X
    தெப்பக்குளத்திற்கு வந்த தண்ணீரை அமைச்சர் மலர் தூவி வரவேற்ற காட்சி.

    பெரியாறு தண்ணீர் சிவகங்கை தெப்பக்குளத்திற்கு வந்தது - அமைச்சர் மலர் தூவி வரவேற்றார்

    சிவகங்கை தெப்பக்குளத்திற்கு பெரியாறு தண்ணீர் வந்தது. அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகரின் மைய பகுதியில் உள்ள தெப்பக்குளம் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக தண்ணீரின்றி தெப்பக்குளம் வறண்டு போனது. இதனால் பொதுமக்கள் கடந்த ஆண்டு, பெரியாறு தண்ணீரை கொண்டு வந்து தெப்பக்குளத்தை நிரப்ப வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை வைத்தனர். அவர் இது குறித்து முதல்-அமைச்சா், துணை முதல்-அமைச்சர் ஆகியோரிடம் தெரிவித்து தண்ணீர் வழங்க கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து சிவகங்கை தெப்பக்குளத்திற்கு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதன்பேரில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று தெப்பக்குளத்தை வந்தடைந்தது.

    முன்னதாக தண்ணீரை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.

    தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது:-

    சிவகங்கை நகர் மக்களின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் பெரியாறு கால்வாயிலிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு 10 நாட்கள் தண்ணீர் விட உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் சிவகங்கை நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில், சிவகங்கை தெப்பக்குளம், செட்டி ஊருணி மற்றும் உடையார் சேர்வை ஊருணி ஆகியவற்றுக்கு தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக சிவகங்கை மக்கள் சார்பில் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×