
கே.கே.நகர் அடுத்த கன்னிகாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி.
கார்பெண்டராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சுமித்ரா (35). இவர் நேற்று இரவு வீட்டில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த ஷூவை கையில் எடுத்தார். அதில் பதுங்கி இருந்த பாம்பு சுமித்ராவின் கையில் கடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.