என் மலர்
செய்திகள்

வாய்க்காலில் துணி துவைத்தவர் மூழ்கி பலி
வெள்ளோட்டில் வாய்க்காலில் துணி துவைத்தவர் மூழ்கி பலி
வெள்ளோட்டில் வாய்க்காலில் துணி துவைத்தவர் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள வெள்ளோட்டை அடுத்த கவுண்டச்சிபாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 43).
கலைவாணன் அந்த பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.
இது பற்றி கிடைத்த தகவலின் பேரில் வெள்ளோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நீரில் மூழ்கி பலியான கலைவாணன் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






