என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஈரோடு காளைமாட்டு சிலை அருகே மயங்கி கிடந்த முதியவர் உயிரிழப்பு

    ஈரோடு காளைமாட்டு சிலை அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு காளைமாட்டு சிலை அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விபரம் தெரிய வில்லை.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×