என் மலர்
செய்திகள்

கொள்ளை
சீர்காழி அருகே வீட்டின் பூட்டு உடைத்து 12 பவுன் நகைகள் கொள்ளை
சீர்காழி அருகே வீட்டின் பூட்டு உடைத்து 12 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே பூம்புகார் கீழத் தெருவில் வசித்து வருபவர் கலையரசி (வயது40). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தீபாவளி பண்டிகைக்காக துணி எடுக்க வெளியூருக்கு சென்று விட்டார்.
பின்னர் துணி எடுத்த பிறகு வரும் வழியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்ற கலையரசி அங்கு இரவு தங்கி விட்டார். இதையடுத்து நேற்று மாலை தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் கலைந்து கிடந்துள்ளது. மேலும் வீட்டின் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த துணிகள், பொருட்கள் சிதறி கிடந்தது.
அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தோடு, செயின் உள்ளிட்ட 12 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கலையரசி பூம்புகார் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story