என் மலர்
செய்திகள்

கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் கைது
கீழ்வேளூர் அருகே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்ற 2 பெண்களை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த தேவூர் குயவர் தெருவை சேர்ந்த செந்தில் மனைவி ராணி (வயது 34) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதைபோல் ராதாமங்கலம் சொசைட்டி அருகே சாராயம் விற்பனை செய்த நாகை வெளிப்பாளையம் வடக்கு நல்லியான் தோட்டம் பகுதியை சேர்ந்த குணசேகரன் மனைவி சாந்தி (45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story






