search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    நெமிலி அருகே வெந்நீர் கொட்டி 2 வயது குழந்தை பலி

    நெமிலி அருகே 2 வயது ஆண் குழந்தை மீது வெந்நீர் கொட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பனப்பாக்கம்:

    நெமிலி அடுத்த வேட்டாங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் கூலி தொழிலாளி. இவரது மகன் யுவராஜ் (வயது 2) கடந்த 16-ந் தேதி மணிகண்டன் குளிப்பதற்காக வீட்டுக்கு வெளியே உள்ள அடுப்பில் வெந்நீர் காயவைத்துள்ளார். அப்போது அங்கு விளையாடிகொண்டிருந்த யுவராஜ் அடுப்பின் மீது இருந்த பாத்திரத்தை பிடித்துள்ளார்.

    இதில் பாத்திரத்தில் இருந்த வெந்நீர் யுவராஜ் உடல் முழுவதும் கொட்டியது. இதனால் யுவராஜ் வலியால் அலறி துடித்தான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் குழந்தையை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை யுவராஜ் பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×