search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலவேம்பு கசாயம்
    X
    நிலவேம்பு கசாயம்

    காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம்

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

    டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ‘ஏ.டி.எஸ்.’ கொசுக்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. பயணிகளுக்கு நகராட்சி ஆணையர் கே.மகேந்திரன், நகர்நல அலுவலர் டாக்டர் முத்து மற்றும் சுகாதார துறையினர் நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். நிலவேம்பு கசாயத்தை பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி குடித்தனர்.

    Next Story
    ×