search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போலி டாக்டர்களை காட்டிக் கொடுங்கள் - சுகாதார துணை இயக்குனர் அறிவுறுத்தல்

    போலி டாக்டர்களை காட்டிக் கொடுங்கள் எனவும் மெடிக்கல் உரிமையாளர்கள் டாக்டர்கள் அறிவுரை இல்லாமல் மருந்து வழங்கக்கூடாது எனவும் சுகாதார துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மெடிக்கல் உரிமையாளர்கள் விற்பனையாளர்களுக்கானடெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடந்தது.

    சுகாதார துணை இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    டெங்கு காய்ச்சல் பகலில் கடிக்ககூடிய கொசுவினால் பரவக்கூடியது. ஒரு மாதம் உயிர் வாழக்கூடிய இந்த கொசு 100 முதல் 200 கொசுக்களை உற்பத்தி செய்துவிடும். டெங்கு காய்ச்சலுக்கு உரிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கொசுவை ஒழிப்பதன் மூலம் இதனை தடுக்க முடியும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துக்கடைகளுக்கு வந்தால் அவர்களுக்கு டாக்டர்கள் அறிவுரை இல்லாமல் மருந்து மாத்திரைகள் வழங்கக்கூடாது. அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.

    அங்கீகாரம் பெற்ற டாக்டர்கள் அறிவுரையை ஏற்று அதற்கான மருந்துகளை மட்டுமே வழங்க வேண்டும். போலி டாக்டர்களுக்கு உடந்தையாக இருக்கக்கூடாது. போலி டாக்டர்கள் குறித்து சுகாதார இணை இயக்குனர் மற்றும் கலெக்டருக்கு புகார் தெரிவிக்கலாம்.

    மருந்து கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பகலில் கடிக்கக்கூடிய கொசுவினால் மட்டுமே டெங்கு பரவுகிறது. இதனால் பகல் நேரங்களில் வீடுகளில் கொசுவர்த்தி கொசுவலை உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும். நீர்ச்சத்து உள்ள உணவுகள் பழங்களை அதிகம் சாப்பிட வலியுறுத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட மெடிக்கல் உரிமையாளர்கள் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×