என் மலர்
செய்திகள்

கைது
கோத்தகிரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- வியாபாரி கைது
கோத்தரிகியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரியை பிடித்த பொதுமக்கள் தர்மஅடித்து கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோத்தகிரி:
கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டை சேர்ந்தவர் ஜவகர்தீன்(வயது 43). வியாபாரி. இவர் தனது நண்பர் ஒருவருடன் காய்கறி வியாபாரம் செய்வதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆட்டோ மூலம் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கோத்தகிரிக்கு சென்றார். அங்கு வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது ஜவகர்தீனுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. இதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டார். வீட்டில் 12 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார். சிறுமியிடம் தண்ணீர் வாங்கி குடித்த ஜவகர்தீன் வீட்டில் யாரும் இல்லாததால் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார்.
அவரது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை பிடித்து தர்ம அடி கொடுத்து கோத்தகிரி போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது கோத்தகிரி போலீசார் அவரை குன்னூர் மகளிர் போலீசில் நிலையத்தில் ஒப்படைக்கும்படி கூறினர். இதையடுத்து ஜவகர்தீனை பொதுமக்கள் குன்னூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story