என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்பாடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றபட்ட காட்சி.
    X
    காட்பாடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றபட்ட காட்சி.

    காட்பாடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்- அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்

    காட்பாடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    காட்பாடியில் வேலூர் சித்தூர் மெயின் ரோட்டில் சில்க் மில் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து ரெயில்நிலையம் வரையிலும் நடை பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நவீன டைல்ஸ் பதிக்கப்பட்டு இந்த நடைபாதை அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்காக சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர். இன்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சில்க் மில் பஸ் நிறுத்தம் அருகிலிருந்து மில்லினியம் பிளாசா வரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    அப்போது 50க்கும் மேற்பட்ட கடைகள் முன்பு இருந்த சிமெண்டு தடுப்புகள் விளம்பர போர்டுகள் போன்றவற்றை எடுத்தனர்.

    அப்போது வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வியாபாரிகளை சமாதானம் செய்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து‌ நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×