என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவன் மீட்பு
    X
    மாணவன் மீட்பு

    அரக்கோணத்தில் மாயமான மாணவன் சென்னையில் மீட்பு

    அரக்கோணத்தில் மாயமான மாணவனை சென்னையில் மீட்ட போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் கிரீஸின் நகரை சேர்ந்தவர் வெங்கடகிரி. இவரது மகன் ஹரிஷ் (வயது 13). அரக்கோணம் திருத்தணி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி மாலை ஹரிஷ் திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்கள் மற்றும் ஹரிஷ் நண்பர்களின் வீடுகளில் தேடினார். ஹரிஷ் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் வெங்கடகிரி புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர்.

    மேலும் அரக்கோணம் முக்கிய வீதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஹரிஷ் ரெயில் நிலையம் நோக்கி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சென்னை சென்ற போலீசார் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ஹரிஷ் நின்று கொண்டிருந்த கண்டனர். இதையடுத்து மாணவனை மீட்ட போலீசார் அரக்கோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×