என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலூரில் அரிசி வியாபாரியை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது

    வேலூரில் அரிசி வியாபாரியை தாக்கி வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    வேலூர்:

    ஆரணி களம்பூரை சேர்ந்தவர் கோதண்டராமன் (49), அரிசி வியாபாரி. இவர் திருவண்ணாமலை, வேலூரில் உள்ள கடைகளுக்கு அரிசி வினியோகம் செய்து வருகிறார். அவ்வப்போது வேலூருக்கு வந்து வியாபாரிகளிடம் அரிசிக்கான பணத்தை வசூலித்து செல்கிறார்.

    கடந்த 4-ந் தேதி வேலூர் வந்த அவர் வேலப்பாடி பகுதியில் அரிசி வினியோகித்த வியாபாரிகளிடம் வசூலித்த ரூ.2 லட்சத்தை ஒரு கைப்பையில் வைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து 2 பைக்கில் வந்த 4 பேர் திடீரென கோதண்டராமனிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து அவர் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த சேகர் (30) உள்பட 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சேகரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவருடன் இந்த வழிப்பறியில் ஈடுபட்டு தலைமைறைவாக உள்ள மற்ற 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×