என் மலர்
செய்திகள்

அரக்கோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்ககோரி மனித சங்கிலி போராட்டம்
அரக்கோணம்:
வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இது தொடர்பாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை புதிய மாவட்டத்திற்கு அரக்கோணம், ஆற்காடு பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரக்கோணத்தை தலைமையிடமாககொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் ஆகியவை நடைபெற்றது.
இந்த நிலையில் அரக்கோணம் அனைத்து கூட்டமைப்பு சார்பில் இன்று தாலுக்கா அலுவலகம் அருகே மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் தேவராஜ், ரெயில் பயணிகள் சங்க தலைவர் நையினா மாசிலாமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட 22-க்கும் மேற்பட்ட அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மனித சங்கிலியில் பங்கேற்றவர்கள் அரக்கோணத்தை புதிய மாவட்டமாக உருவாக்க கோரி கோஷம் எழுப்பினர்.
அரக்கோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.






