search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சிலைகள்
    X
    விநாயகர் சிலைகள்

    அனுமதி இல்லாத இடத்தில் விநாயகர் சிலைகளை கரைத்தால் நடவடிக்கை

    அனுமதி இல்லாத இடத்தில் விநாயகர் சிலைகளை கரைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    காஞ்சிபுரம் நகரில் காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகருக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் மாலையாக அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    டி.கே.நம்பி தெருவில் உள்ள செல்வ விநாயகர், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள சுமார் 1000 கோயில்களில் உள்ள விநாயகருக்கு எருக்கம்பூ மாலை, சுண்டல், பழங்கள், கரும்பு உள்ளிட்டவைகளை படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் 843 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.

    இந்த ஆண்டு 1326 இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்படுகின்றது. இந்த சிலைகள் போலீசார் அறிவுறுத்தியுள்ள இடங்களில் கரைக்கப்பட உள்ளன.

    காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை, சர்வதீர்த்த குளம், மதுராந்தகம் ஏரி, ஆலம்பரை குப்பம் (கடப்பாக்கம்), வடபட்டினம் குப்பம், சதுரங்கபட்டினம் குப்பம், மாமல்லபுரம் கடற்கரை, கோவளம் கடற்கரை, பல்கலைக்கழக கடற்கரை, நீலாங்கரை கடற்கரை, கடலூர் குப்பம், தழுதாலிகுப்பம், பரமண்கேணி குப்பம் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வேறு இடங்களில் கரைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×