என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வைகோ
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வைகோ வீடு திரும்பினார்
By
மாலை மலர்29 Aug 2019 10:40 AM GMT (Updated: 29 Aug 2019 10:40 AM GMT)

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வைகோ டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20-ந்தேதி முதல் விழிப்புணர்வு பிரசார பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அதற்காக கடந்த 18-ந்தேதி அவர் மதுரை சென்றார்.
அங்கு தங்கி இருந்தபோது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நிலை சீரானதை தொடர்ந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய வைகோவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் கடந்த 19-ந்தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதய பரிசோதனைகள் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் வைகோ உடல்நிலை தேறினார். இதையடுத்து அவர் நேற்று பகல் 12 மணியளவில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
அவர் பூரணமாக குணமடைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story
×