என் மலர்
செய்திகள்

கைது
கீரனூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
கீரனூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை கைது செய்தனர்.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக பழைய குற்றவாளியான புதுக் கோட்டை காமராஜர்புரம் ஜெயக்குமார் என்பவரது மகன் பாலாஜி(வயது22)என்பவரை போலீசார் தேடிவந்னர்.
இந்நிலையில் களமாவூர் மேம்பால ரெயில்வேகேட் அருகில் இரவு கீரனூர் சப்இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த், குற்றப்பிரிவு போலீசார் ராகவன் மற்றும் டேவிட் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பாலாஜியை மடக்கிபிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணை முடிவில் தான் திருடியதாக பாலாஜி ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






