என் மலர்
செய்திகள்

வாலிபர் பிணம்
திருப்பத்தூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம்
திருப்பத்தூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதி மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத (25)வயது மதிக்கதக்க வாலிபர் இறந்து கிடந்தார். அவரது கையில் முருகன், பழனி என பச்சை குத்தி உள்ளார்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் உடலை கைபற்றி இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






