என் மலர்
செய்திகள்

ஸ்ரீபால்
ஆற்காடு அருகே பள்ளியில் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர் திடீர் மரணம்
ஆற்காடு அருகே பள்ளியில் பாடம் நடத்தி கொண்டிருந்த போது ஆசிரியர் நெஞ்சுவலியால் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆற்காடு:
ஆற்காடு வாழபந்தல் அருகே உள்ள மேலப்பழந்தையை சேர்ந்தவர் ஸ்ரீபால் (வயது 52) இவர் வாழபந்தல் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று வழக்கம் போல் பள்ளியில் ஸ்ரீபால் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனை கண்ட சக ஆசிரியர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீபால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வாழபந்தல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






