என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலி (கோப்பு படம்)
    X
    பலி (கோப்பு படம்)

    வாணியம்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி

    வாணியம்பாடி அருகே நள்ளிரவு கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி 7 மணி நேரத்திற்கு பின் பிணமாக மீட்கப்பட்டார்.
    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரராவ் (வயது 48). கூலி தொழிலாளி. நேற்று வேலை முடிந்து இரவு 7.30 மணியளவில் வளையாம்பட்டு பகுதி நிலத்தின் வழியாக தனது கிராமத்திற்கு நடந்து சென்றார்.

    அப்போது நிலை தடுமாறி அங்குள்ள சுமார் 50 அடி ஆழ பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் விழுந்த அவர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர்.

    ஆனால் சிறிதளவு தண்ணீர் அதிக சேறு இருந்ததால் அதில் சிக்கிய ராமச்சந்திரராவை கிராம மக்களால் மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் இரவு 8 மணி முதல் அவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    சுமார் 7 மணி நேரம் போராடி இன்று அதிகாலை 2 மணியளவில் ராமச்சந்திரராவை பிணமாக மீட்டனர்.

    வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் அங்கு வந்து, தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×