என் மலர்
செய்திகள்

வேலூரில் தலைமை ஆசிரியையிடம் 8 பவுன் செயின் பறிப்பு
வேலூரில் தெருவில் நடந்து சென்ற ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையிடம் 8 பவுன் செயினை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் தொரப்பாடி எழில்நகரை சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி நவநீதம் (வயது 67) இருவரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள்.
நவநீதம் நேற்று இரவு பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த மர்மநபர்கள் வந்தனர்.
தெருவில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நவநீதம் அணிந்திருந்த 10 பவுன் தங்க செயினை பிடித்து இழுத்தனர்.
அப்போது சுதாரித்து கொண்ட நவநீதம் செயினை கேட்டியாக பிடித்து கொண்டார். இதனால் கொள்ளையர்கள் கையில் 8 பவுன் சிக்கியது.
இதனால் திடுக்கிட்ட நவநீதம் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் செயின் பறிப்பு கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதுபற்றி பாகாயம் போலீசில் நவநீதம் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story