என் மலர்

  செய்திகள்

  ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
  X

  ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
  ஆற்காடு:

  ஆற்காடு அடுத்த பூங்கனூரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

  இதுகுறித்து பஞ்சாயத்து செயலரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

  இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் காவனூர்- பாலமதி செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

  இது குறித்து தகவலறிந்த திமிரி போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சொர்ணலதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  Next Story
  ×