search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபை ஜூன் மூன்றாம் வாரத்தில் கூட வாய்ப்பு
    X

    சட்டசபை ஜூன் மூன்றாம் வாரத்தில் கூட வாய்ப்பு

    அரசு துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதிக்க சட்டசபை ஜூன் மூன்றாம் வாரத்தில் கூட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    அதைத் தொடர்ந்து பிப்ரவரி 11, 12, 13-ந் தேதிகளில் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு பிப்ரவரி 14-ந் தேதியன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசினார்.

    அனைத்து அலுவல்களும் முடிந்ததைத் தொடர்ந்து, சட்டசபை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் பிப்ரவரி 14-ந் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

    பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அரசு துறைகளின் மானியக் கோரிக்கைகள், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி மானியக் கோரிக்கைகள் தொடர்பான நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. சட்டசபை மரபுப்படி 6 மாதங்களுக்குள் மீண்டும் சட்டசபை கூட்டம் கூடவேண்டும். அதாவது அக்டோபர் 13-ந் தேதிக்குள் மீண்டும் சட்டசபை கூட்டப்பட வேண்டும்.

    இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தாலும், ஆட்சியை தக்க வைத்துள்ளது.

    சட்டசபையை மீண்டும் கூட்டுவதற்கு அதிக நாட்கள் இருந்தாலும், ஜூன் 2 அல்லது 3-ம் வாரத்தில் கூட்டத் தொடரைத் தொடங்க வாய்ப்பிருப்பதாக சட்டசபை வட்டாரம் தெரிவித்தது.



    இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் ப.தனபால் மீது தி.மு.க. கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மிக முக்கிய நிகழ்வாக இருக்கும்.

    எனவே தி.மு.க.வின் தீர்மானத்தை முறியடிக்க பல்வேறு முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது.

    Next Story
    ×