என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி பதவியேற்பு விழா- மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
    X

    மோடி பதவியேற்பு விழா- மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

    டெல்லியில் வரும் 30-ம் தேதி மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

    மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. திமுக சார்பில் எம்பி.க்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    தமிழகம் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×