search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறைந்த அழுத்த மின்விநியோகத்தை கண்டித்து பெரம்பலூரில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்
    X

    குறைந்த அழுத்த மின்விநியோகத்தை கண்டித்து பெரம்பலூரில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்

    பெரம்பலூரில் குறைந்த அழுத்த மின்விநியோகத்தை கண்டித்து பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட முத்து நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீர் இறைக்கும் மின் மோட்டார், கிரைண்டர், மிக்ஸி, ஏசி உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    இதனால் மின்சார பழுதினை சீரமைத்து தட்டுபாடின்றி மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்ககோரி பல முறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பெரம்பலூர் கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மின்விநியோக குறைபாடை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×