என் மலர்

  செய்திகள்

  விழுப்புரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற கைதி தப்பி ஓட்டம்
  X

  விழுப்புரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற கைதி தப்பி ஓட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு விசாரணைக்கு காரில் அழைத்து சென்ற போது விழுப்புரத்தில் தப்பி ஓடிய கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
  விழுப்புரம்:

  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பலம் அர்ஜூணன்( வயது27). இவர் கேரளாவில் கஞ்சா விற்று வந்தார். இது குறித்து கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து பலம் அர்ஜூணனை கைது செய்தனர்.

  பலம் அர்ஜூணன் மீது ஆந்திர மாநில போலீஸ் நிலையத்திலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

  அந்த வழக்குகள் தொடர்பாக பலம் அர்ஜூணனிடம் விசாரணை நடத்த ஆந்திர மாநில போலீசார் முடிவு செய்தனர்.

  அதன் பேரில் அவரை ஆந்திர போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக கேரள போலீசார் 4 பேர் பலம் அர்ஜூணனை அழைத்து கொண்டு ஒரு காரில் ஆந்திரா நோக்கி புறப்பட்டனர்.

  அந்த கார் இன்று அதிகாலை விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

  அப்போது பலம் அர்ஜூணன் கழிவறைக்கு செல்ல வேண்டும் என போலீசாரிடம் கூறினார்.

  உடனே காரை சாலையோரமாக போலீசார் நிறுத்தினர். பின்னர் பலம் அர்ஜூணனை காரில் இருந்து இறக்கி கை விலங்கையும் கழற்றி விட்டனர்.

  கழிவறைக்கு சென்ற பலம் அர்ஜூணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று பார்த்த போது பலம் அர்ஜூணனை காணவில்லை. அவரை அந்த பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

  பின்னர் இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதி பலம் அர்ஜூணனை வலை வீசி தேடி வருகின்றனர்.
  Next Story
  ×