என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவேரிப்பாக்கம் அருகே லாரி மீது கார் மோதி சென்னை வாலிபர்கள் 2 பேர் பலி
    X

    காவேரிப்பாக்கம் அருகே லாரி மீது கார் மோதி சென்னை வாலிபர்கள் 2 பேர் பலி

    காவேரிப்பாக்கம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் சென்னை வாலிபர்கள் 2 பேர் இறந்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கண்டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது சென்னை நோக்கி வேகமாக வந்த கார் நிலைதடுமாறி நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. அதில் இருந்த 2 வாலிபர்கள் உடல் நசுங்கி இறந்தனர். மற்றொரு வாலிபர் படுகாயமடைந்தார். காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    காயமடைந்த வாலிபரை 108 ஆம்புலன்சு மூலம் வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியானவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கபட்டது. சிகிக்சை பெற்று வரும் வாலிபர் சுயநினைவில் இல்லை. இதனால் அவர்கள் யார் என்பது தெரியவில்லை, முதற்கட்ட விசாரணையில் பலியானவர்கள் சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

    மேலும் மது குடித்துவிட்டு கார் ஓட்டி வந்துள்ளனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×