என் மலர்

  செய்திகள்

  வியாசர்பாடியில் குடுகுடுப்பைக்காரர் குத்திக்கொலை - ஆட்டோ டிரைவர் கைது
  X

  வியாசர்பாடியில் குடுகுடுப்பைக்காரர் குத்திக்கொலை - ஆட்டோ டிரைவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வியாசர்பாடியில் குடுகுடுப்பைக்காரர் குத்திக்கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெரம்பூர்:

  சென்னை வியாசர்பாடி காந்தி நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. குடுகுடும்ப்பைகாரர். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் வெங்கடேசன். ஆட்டோ டிரைவர்.

  குப்புசாமிக்கும், வெங்கடேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

  அப்போது குப்புசாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு வந்து வெங்கடேசனை குத்த முயன்றார். வெங்கடேசன் அவரிடம் இருந்து கத்தியை பறித்து குப்புசாமியை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த குடுகுடுப்பைக்காரர் குப்புசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

  இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×