search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர்- திருவண்ணாமலையில் போலீசார் தீவிர சோதனை
    X

    வேலூர்- திருவண்ணாமலையில் போலீசார் தீவிர சோதனை

    இலங்கையில் கடந்த 21-ந் தேதி தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். #SrilankanBlasts

    வேலூர்:

    தமிழகத்திலும் இத்தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து தமிழகத்தில் தேவாலயங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னையில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கந்தர்ப்பதாஸ் என்ற பயங்கரவாதியை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னைக்கு அருகாமையில் உள்ள மாவட்டம் வேலூர் மாவட்டம். இங்கும் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் வருகின்றனர்.

    வேலூரில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தவர்கள் உள்ளனர். நோயாளிகள் போர்வையில் நாசவேலையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் சோதனை செய்ய காவல்துறை சார்பில் 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 30 குழுக்களை சேர்ந்த போலீசார் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

    5 குழுவினர் வேலூர் மாநகரில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை செய்து வருகின்றனர். அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதி போலீசாரும் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    முக்கிய சுற்றுலா தலமான ஏலகிரிமலையில் உள்ள தங்கும் விடுதிகளை ஒரு குழுவினரும், ஆம்பூர், காட்பாடி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் தலா ஒரு குழுவினரும் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் மற்றும் ஆந்திர எல்லை பகுதியிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ் நிலையம், தேவாலயங்கள் மற்றும் முக்கிய இடங்களை கண்காணித்து வருகின்றனர்.

    சந்தேகப்படும் படியாக யாராவது நடமாடினால் அது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.  #SrilankanBlasts

    Next Story
    ×