என் மலர்

  செய்திகள்

  திருநாவுக்கரசு வீட்டில் மீண்டும் சோதனை நடத்த போலீசார் திட்டம்
  X

  திருநாவுக்கரசு வீட்டில் மீண்டும் சோதனை நடத்த போலீசார் திட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பலாத்காரம் செய்து சிறுமியை கொன்று புதைத்ததாக கூறப்பட்ட புகாரில் தேவைப்பட்டால் திருநாவுக்கரசு வீட்டில் மீண்டும் சோதனை நடத்துவோம் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #PollachiAbuseCase
  கோவை:

  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

  இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான மணிவண்ணன் அளித்த வாக்குமூலத்தில் பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்திருப்பதாக கூறினார்.

  இதைத் தொடர்ந்து 5 பேர் மீதும் கூடுதலாக இந்திய தண்டனை சட்டம் 376 (கற்பழிப்பு) பிரிவையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேர்த்துள்ளனர்.

  இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், மாணவிகள் என 10-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்ட போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடந்த சம்பவங்கள் பற்றி அவர்கள் தெரிவித்தனர். ஆனால் எழுத்துப் பூர்வமாக புகார் தெரிவிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தி, புகார் பெறுவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

  பாலியல் கும்பல் பற்றி தகவல் தெரிந்தவர்கள் புகார் செய்யலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு தொலைபேசி எண் அறிவித்திருந்தனர். அதில் 200-க்கும் மேற்பட்டோர் புகார் செய்த நிலையில் இதுவரை 140 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிலரை இவ்வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர்.

  கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், கடந்த மாதம் ஒரு ஆடியோவும் வெளியாகி இருந்தது. அதில் பேசிய பெண் ஒருவர் பொள்ளாச்சி கும்பலில் 8 பேர் வரை உள்ளதாகவும், இந்த கும்பல் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாவும், உடலை திருநாவுக்கரசின் வீட்டின் பின்புறம் புதைத்துள்ளதாகவும் கூறி இருந்தார்.


  இந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றியது யார்? என்பது குறித்து தகவல் கேட்டு யூ-டியூப், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் அனுப்பினர். அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. எனவே அந்த ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

  இவ்வழக்கில் குற்ற பத்திரிகை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த மாதம் சமூக வலைதளத்தில் வெளியான ஒரு ஆடியோ குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் திருநாவுக்கரசு வீட்டில் மீண்டும் சோதனை நடத்துவோம்.

  இவ்வாறு அவர்கள் கூறினர். #PollachiAbuseCase
  Next Story
  ×