search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது
    X

    மதுரையை தவிர்த்து 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது

    மதுரையை தவிர 37 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சரியாக 6 மணிக்கு நிறைவடைந்தது. #LokSabhaElections2019 #TNElections2019
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்தது.

    அதேபோல், கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

    சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    தமிழகத்தில் மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள 37 தொகுதிகளிலும் சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டோக்கன் கொடுக்கப்படும் சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்களிக்க கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது.

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், பதிவாகும் வாக்குகள், வருகிற மே 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். #LokSabhaElections2019 #TNElections2019
    Next Story
    ×