search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் பயணிகள் மீது காவல்துறையினர் தடியடி
    X

    சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் பயணிகள் மீது காவல்துறையினர் தடியடி

    வாக்குபதிவையொட்டி சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளநிலையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். #KoyambeduBusStand
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுவதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தங்களது சொந்த ஊரில் வாக்களிக்கும் உரிமை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். தேர்தல் நடைபெறுவதால் பள்ளி மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    அதனால் வெளியூர் செல்லக் கூடியவர்கள் நேற்று மாலை முதல் பயணத்தை தொடர்வார்கள் என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனிடையே வாக்குபதிவையொட்டி சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை முதல் குவிய தொடங்கினர். மேலும் நேற்று இரவு 7 முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சரியான முறையில் பஸ்கள் இயக்கப்படவில்லை என பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொது மக்கள் தர்ணா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அங்கு கூடியிருந்தவர்களை களைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.   ஆனால் மக்கள் செல்ல மறுத்ததால் அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.  இதனால் சற்று நேரம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் அங்கு இருந்த பொது மக்கள் ஓட்டு போட சொந்த ஊர் செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும், தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முடியவிலலை எனவும், இரவு 7 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படவில்லை என காவல் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.  

    தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


    #Loksabhaelections2019 #TNBuses #SpecialBuses #KoyambeduBusStand 
    Next Story
    ×