என் மலர்

  செய்திகள்

  வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்த கல்லூரி மாணவி
  X

  வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்த கல்லூரி மாணவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம் அடைந்தார்.
  வடமதுரை:

  திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரையை சேர்ந்தவர் கீர்த்தனா. (வயது 24). திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். இவரது உறவினர் சங்கர். (24). இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

  இந்த விசயம் கீர்த்தனாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர்.

  அதன்படி வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு தங்களது புகைப்படத்தை வாட்ஸ் அப் மூலம் பெற்றோருக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கோரி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

  போலீசார் 2 தரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேசினர். இதற்கு கீர்த்தனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு தங்களுக்கும், மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதிக்கொடுத்து சென்றனர். 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என கீர்த்தனாவை சங்கருடன் அனுப்பி வைத்தனர்.
  Next Story
  ×