search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடை விடுமுறை தொடங்கியது - ஜூன் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு
    X

    கோடை விடுமுறை தொடங்கியது - ஜூன் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

    ஆண்டு இறுதி தேர்வு முடிந்ததுள்ள நிலையில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. கோடை விடுமுறை முடிந்து மீண்டும் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. #SummerHolidays #Schools
    சென்னை:

    பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி முடிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் நிறைவு பெற்றது.

    வருகிற 18-ந் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதால், விரைவில் ஆண்டு இறுதி தேர்வை முடிக்க பள்ளிக்கல்வி உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு 13-ந் தேதியுடனும் (நேற்று), 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 12-ந் தேதியுடனும் (நேற்று முன்தினம்) ஆண்டு இறுதி தேர்வை நடத்தி முடிக்க தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, கடந்த மாதம் 30-ந் தேதியில் இருந்து 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி நடைபெற்று முடிந்தது. ஆண்டு இறுதி தேர்வு முடிந்ததுள்ள நிலையில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.

    கோடை விடுமுறை முடிந்து மீண்டும் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. அநேகமாக ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்றும், வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு ஓரிரு நாட்கள் தள்ளிப்போகலாம் என்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #SummerHolidays #Schools

    Next Story
    ×