என் மலர்

  செய்திகள்

  போச்சம்பள்ளி அருகே குளிக்க சென்ற தொழிலாளி கிணற்றில் மூழ்கி பலி
  X

  போச்சம்பள்ளி அருகே குளிக்க சென்ற தொழிலாளி கிணற்றில் மூழ்கி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போச்சம்பள்ளி அருகே குளிக்க சென்ற தொழிலாளி கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  போச்சம்பள்ளி:

  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் அருகே உள்ள சென்றாநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த முனிசிங் என்பவரது மகன் நாகராஜ்சிங் என்பவருக்கு சொந்தமான 100 அடி ஆழம் உள்ள விவசாய கிணறு ஒன்று அந்த பகுதியில் உள்ளது. இந்த கிணற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அதே கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கனகராஜ் (வயது 40) என்பவர் வேலைக்கு சென்றுவந்து பின்னர், குளிப்பதற்காக கிணற்றுக்கு சென்றதாக தெரிகிறது. குளிக்கசென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

  மேலும், கிணற்றில் அவர் இல்லாததால் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதை கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் போச்சம்பள்ளி தீ அணைப்பு நிலையத்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரவி மற்றும் மோகன், கபிலன், முத்துராஜ், கார்த்திகேயன், வசந்த் ஆகியோர் அடங்கிய வீரர்கள் விரைந்துசென்று பொதுமக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

  பின்னர், சடலத்தை கைப்பற்றிய போச்சம்பள்ளி போலீசார் இது கொலையா? அல்லது எதிர்பாராத விபத்தா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×