என் மலர்
செய்திகள்

பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை வழக்கில் இளைஞர் கைது
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். #PollachiIssue #StudentMudercase #SpecialForces
பொள்ளாச்சி:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எந்த தகவலும் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். காட்டூர் போலீசார் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்.
இதற்கிடையே, பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி பிரகதி பிணமாக கிடந்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மாணவியை மர்ம ஆசாமிகள் காரில் கடத்திச்சென்று கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மாணவி பிரகதிக்கு வரும் ஜூன் மாதம் 13-ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தநிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலையாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது என்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்தில் சதீஷ் என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #PollachiIssue #StudentMudercase #SpecialForces
Next Story






