என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது
    X

    வேதாரண்யம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது

    வேதாரண்யம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதில் தொடர்புடைய பெரிய குத்தகை பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் முனீஸ்வரன் (வயது 30) என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி முனீஸ்வரனை நேற்று கைது செய்தார். #tamilnews
    Next Story
    ×