என் மலர்
செய்திகள்

கோவையில் பறக்கும்படை வாகன சோதனை - பேக்கரி உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை:
பாராளுமன்ற தேர்தலில் பணபட்டுவாடாவை தடுக்க கோவை மாவட்டத்தில் 80 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவசியம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லாவிட்டால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதேபோல, மொத்தமாக கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கும் ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படை அலுவலர்கள் நள்ளிரவில் காந்திபுரம் ஜி.பி. சிக்னல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சித்தாபுதூரை சேர்ந்த முனுசாமி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 760 இருந்தது தெரிய வந்தது.
பேக்கரி நடத்தி வரும் இவர் வியாபார ரீதியாக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார். எனினும் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அலுவலர்கள் இன்று காலை வீரகேரளம் பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டெம்போவை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர்.
டெம்போவில் சுமார் 5 டன் அளவுக்கு அரிசி மற்றும் கோதுமை இருந்தது. இவை எங்கு கொண்டு செல்லப்படுகிறது? உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என டிரைவரிடம் விசாரித்தனர். அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அரிசி, கோதுமையுடன் டெம்போவை பறிமுதல் செய்து கலெக்டர் அலுவலகத் துக்கு கொண்டு சென்று அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Next Story