என் மலர்

  செய்திகள்

  ஏர்வாடி அருகே பைக் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
  X

  ஏர்வாடி அருகே பைக் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏர்வாடி அருகே பைக் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  களக்காடு:

  ஏர்வாடி அருகே உள்ள எல்.என்.எஸ். புரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). இவரது மனைவி ஜாஸ்மீன் (30). ராஜேஷ் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதற்காக கணவன்-மனைவி இரண்டு பேரும் கோவையில் தங்கியுள்ளனர். 

  இந்நிலையில் ஜாஸ்மீனின் தாய்க்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பார்ப்பதற்காக கணவன்-மனைவி இரண்டு பேரும் எல்.என்.எஸ்.புரத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் இருவரும் டாணாவில் உள்ள ஜாஸ்மீனின் தாயாரை பார்க்க சென்றனர். அவர்கள் கோசல்ராம் நகர் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதியது. 

  இதில் பலத்த காயமடைந்த அவர்களை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். 

  ஜாஸ்மீனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×