என் மலர்

  செய்திகள்

  அவனியாபுரத்தில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசில் புகார்
  X

  அவனியாபுரத்தில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசில் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுப்பதாக வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

  மதுரை:

  அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் ஜெகதீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் பிரவீன்குமார் (வயது22). இவர் 17 வயது பிளஸ்-2 மாணவியுடன் நெருங்கி பழகி உள்ளார்.

  மேலும் மாணவிக்கு திருமண ஆசை காட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.

  இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி கேட்டார். ஆனால் பிரவீன் குமார் மறுத்து விட்டார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை ஏமாற்றிய பிரவீன்குமாரை தேடி வருகின்றனர்.

  இதேபோல் மதுரை எஸ்.ஆலங்குளம் குலமங்கலம் மெயின்ரோடு அன்பு நகரைச் சேர்ந்தவர் ராஜபூபதி, கூலி தொழிலாளி (35). இவருக்கும், 17 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

  தினமும் கல்லூரிக்கு சென்றுவரும்போது அவர்களிடையே நெருக்கம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து மாணவியை தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தண்டான்தோப்பு பகுதிக்கு ராஜபூபதி அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார்.

  இதுகுறித்து ராஜபூபதியிடம் தெரிவித்தபோது அவரும், உறவினர்கள் செல்வராணி, முருகேச பாண்டியன், வளர்மதி ஆகியோரும் கருவை கலைக்கும்படி கூறி உள்ளனர். மேலும் அதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபூபதி மற்றும் முருகேசபாண்டியனை கைது செய்தனர்.

  Next Story
  ×