என் மலர்

  செய்திகள்

  அய்யங்குட்டிபாளையத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
  X

  அய்யங்குட்டிபாளையத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அய்யங்குட்டி பாளையத்தில் நோய் கொடுமையால் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  புதுச்சேரி:

  புதுவை அய்யங்குட்டி பாளையம் அமைதி நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 71). இவரது மனைவி அகிலாம்பாள். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

  ராமலிங்கத்துக்கு நோய் அதிகமானதால் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தார்.

  இந்த நிலையில் நோய் கொடுமை அதிகமானதால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கயிற்றால் ஊஞ்சலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  அப்போது வீட்டுக்கு வந்த அவரது மகன் ரமேஷ் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

  அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×