search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய கனிமொழி கைதாகி விடுதலை
    X

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய கனிமொழி கைதாகி விடுதலை

    பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையை கண்டித்து திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். #PollachiAbuseCase #DMK #Kanimozhi
    கோவை:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள்-பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. 

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். 

    பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையைக் கண்டித்து திருவள்ளுவர் திடலில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.



    அப்போது பேசிய கனிமொழி, பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தமிழகத்தையே தலைகுனியச் செய்துள்ளது. ஏழு ஆண்டுகளாக ஒரு நெட்வொர்க் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது. ஆனால் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    காவல்துறை யாருக்கு வேலை செய்கிறார்கள்...? பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளிவரும் அளவிற்கு காவல் துறையினர் நடந்து கொண்டுள்ளனர் என கண்டனம் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழியை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்தில்
    கைதான அவரை போலீசார் விடுவித்தனர். #PollachiAbuseCase #DMK #Kanimozhi 
    Next Story
    ×