என் மலர்

  செய்திகள்

  தஞ்சை அருகே எலக்ட்ரீசியன் வீட்டில் தீ விபத்து
  X

  தஞ்சை அருகே எலக்ட்ரீசியன் வீட்டில் தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை அருகே எலக்ட்ரீசியன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமாயின.

  தஞ்சாவூர்:

  தஞ்சையை அடுத்த வல்லம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 49) எலக்ட்ரீசியன். நேற்று ஜெயபால் மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

  அப்போது வீட்டின் மேல் சென்ற மின்வயர் திடீரென ஒன்றுடன் ஒன்று உரசி வீட்டில் தீ பிடித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவெள பரவியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

  இதுபற்றி அவர்கள் தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் வீட்டில் இருந்த டி.வி, மிக்சி, கிரைண்டர், சேர் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமாகின. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

  Next Story
  ×