என் மலர்
செய்திகள்
X
விழுப்புரம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதல் - 2 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்9 March 2019 3:15 PM IST (Updated: 9 March 2019 3:15 PM IST)
விழுப்புரம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள அய்யூர்அகரம் பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகம் (வயது 46), வேலு (45), ரகோத்தமன். இவர்கள் 3 பேரும் விழுப்புரத்தில் ஆட்டோ ஓட்டி வந்தனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் விழுப்புரத்தில் நேற்று ஆட்டோ சவாரியை முடித்துவிட்டு சண்முகத்தின் ஆட்டோவில் 3 பேரும் வீட்டுக்கு புறப்பட்டனர். ஆட்டோவை சண்முகம் ஓட்டினார்.
விழுப்புரம்-சென்னை புறவழி சாலையில் உள்ள முத்தாம்பாளையம் என்ற இடத்தில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையை ஆட்டோவில் கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக ஆம்னிபஸ் ஒன்று அதிவேகமாக வந்தது. அந்த பஸ் கண் இமைக்கும் நேரத்தில் சண்முகம் ஓட்டிவந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது.
ஆட்டோவை ஓட்டிவந்த சண்முகம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வேலுவும், ரகோத்தமனும் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே வேலு பரிதாபமாக இறந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த ரகோத்தமனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×
X