search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை மக்கள் காங்கிரசுக்கு கை கொடுக்க வேண்டும்- நாராயணசாமி பேச்சு
    X

    புதுவை மக்கள் காங்கிரசுக்கு கை கொடுக்க வேண்டும்- நாராயணசாமி பேச்சு

    போராட்டத்தின் பிரதிபலனாக புதுவை மக்கள் காங்கிரசுக்கு கை கொடுக்க வேண்டும் என்று நாராயணசாமி பேசியுள்ளார். #narayanasamy #congress #kiranbedi

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு மாத ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    நெல்லித்தோப்பு தொகுதியில் புதிதாக 295 பேருக்கு முதியோர், விதவை உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்கான பயனாளிகளுக்கு ஓய்வூதிய அட்டை மற்றும் முதல் மாத உதவித்தொகை வழங்கும் விழா கீர்த்தி மகாலில் நடந்தது. விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். முதல்அமைச்சர் நாராயணசாமி பயனாளிகளுக்கு உதவித் தொகையை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    நான் 29 தொகுதியை ஒரு கண்ணாகவும், நெல்லித் தோப்பு தொகுதியை ஒரு கண்ணாகவும் பாவிப்பேன் என கூறியிருந்தேன். அதன்படி ஒரு கண்ணாக நெல்லித்தோப்பை பார்க்கிறேன். திட்டங்கள் அனைத்தையும் போராடி பெற வேண்டிய நிலையில் அரசு உள்ளது.

    முதியோர் பென்‌ஷனையே 2 ஆண்டுக்கு பிறகு புதிதாக தற்போதுதான் வழங்குகிறோம். அதையும் நெல்லித்தோப்பு தொகுதியில்தான் தொடங்கி உள்ளோம். இலவச அரிசி, சென்டாக் கல்வி உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி என பல திட்டங்கள் வழங்க வேண்டிய நிலை உள்ளது.

    கவர்னருக்கு எதிராக இரவு- பகலாக பனியில் போராடியதன் விளைவாகத்தான் இதற்கு அனுமதி கிடைத்தது. இன்னும் 2 மாதம் பொறுத்திருங்கள்.

    இந்த நிலைமை மாறும். போராட்டத்திற்கு பிரதிபலனாக எங்களோடு மக்கள் கைகொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் டெல்லி பிரதிநிதி ஜான்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் பழனி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #narayanasamy #congress #kiranbedi

    Next Story
    ×