என் மலர்
செய்திகள்

பரமக்குடி வாக்காளர் சிறப்பு முகாம் பணியில் ஆள் மாறாட்டம்- 3 பேர் கைது
பரமக்குடி வாக்காளர் சிறப்பு முகாமில் ஆள் மாறாட்டம் செய்து பணியில் இருந்த கல்லூரி மாணவரை கலெக்டர் வீரராகவ ராவ் ஆய்வின் போது கண்டு பிடித்தார். இதையடுத்து கல்லூரி மாணவர், விரிவுரையாளர், நகராட்சி ஊழியர் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்த்திடும் வகையில் வாக்காளர் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது. 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1367 வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம் நடைபெற்றது.
முகாம் பணிகளை கலெக்டர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பரமக்குடி சவுராஷ்ரா மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தபோது அங்கு பணியில் இருந்த வாலிபரின் மீது கலெக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து முகாம் மேற்பார்வையாளர் பரமக்குடி நகராட்சி உதவியாளர் சண்முகவேல் என்பவரிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், தனியார் கல்லூரி விரிவுரையாளர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த காளி முருகன் என்பவர் வெளியே சென்று விட்டதாகவும், அவருக்கு மாற்றாக அவரது உறவினர் கல்லூரி மாணவர் தினகரன் (வயது 19) என்பவரை நியமித்து சென்றதாகவும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவின் பேரில் பரமக்குடி தாசில்தார் பரமசிவன் பரமக்குடி டவுன் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணி விசாரணை நடத்தி ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் கல்லூரி மாணவர் தினகரன்(19), தனியார் கல்லூரி விரிவுரையாளர் காளிமுருகன்(வயது 27), நகராட்சி உதவியாளர் சண்முகவேல் (வயது39) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தார்.

Next Story