என் மலர்
செய்திகள்

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் காயம்
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சை வண்ணாரப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் மருதன். இவரது மனைவி அஞ்சலை (வயது 50). இவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்து வெளியே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி-அம்மன்பேட்டை புற வழி சாலையில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அஞ்சலை காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஞ்சலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து கள்ளபெரம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






